
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகைரூ .1000 இருந்து ரூ.1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மூலம் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் 3 கட்டமாக நடத்தப்பட உள்ளனஎன தெரிவித்தார் . மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு மணிப்பூர் சம்பவம் குறித்து அதிமுக இதுவரை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

