
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டையில் ஸ்ரீஅஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீஅஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோவிலுக்கு நடிகை த்ரிஷா சார்பாக 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த யானை கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மீட்டர் உயரமும் 800 எடை வடிவமைப்பில் பிரம்மாண்டமாக இந்த யானை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திர யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும் தன் காதுகள், துதிக்கைகள், தலை அனைத்தும் அசையும் வகையில் தத்ரூபமாக உண்மையான யானை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கிலும், கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் People For Cattle In India உடன் இணைந்து நடிகை த்ரிஷா, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த யானையை வழங்கியுள்ளார்.அப்படியே நிஜ யானையை போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் யானை அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு இயந்திர யானையை அறிமுகம் செய்தனர். பக்தர்களும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.


