
Karaikal: காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் புதிதாக “நம்ம காரைக்கால்” என்று வாசகத்தோடு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான நண்டலாறு பகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் எல்லை தொடங்கும் இடத்தில் புதிதாக “நம்ம காரைக்கால்” என்ற வாசகத்தோடு புதிதாக செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் காரைக்கால் மாவட்டத்தின் நுழைவு வாயிலை குறிக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள.
இந்த வாசகத்தில் நம்ம என்ற வாசகம் தமிழிலும் காரைக்கால் என்ற வாசகம் ஆங்கிலத்திலும் காண்போரை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மேலும் இதைப்போல் காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். நம்ம காரைக்கால் என்ற வாசகம் தற்போது காரைக்காலில் முக்கிய செல்பி பாயிண்டாக மாறி உள்ளது.
மேலும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் “நம்ம காரைக்கால்” என்ற வாசகம் வைக்கப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் காரைக்கால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


