Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு பேரிடி.. அதிர்ச்சி கொடுத்த அறிவுரைக் கழகம்!

Advertisements

சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் 12-ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவலர்களை இழிவாகப் பேசியதாகக் கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதேபோலத் திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர்மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது சிஎம்டிஏ அதிகாரி அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அந்த வழக்கிலும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாகச் சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் 12-ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாகச் சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்திய நிலையில் அவர்மீதான குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால் குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *