
Actress Sakshi Agarwal : உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள அல்மோரா என்ற இடத்தில் பிறந்த நடிகை மற்றும் மாடல் அழகி தான் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால்.
அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சாக்ஷி அகர்வால், தன்னை அந்தத் திரைப்படத்திற்கு வேறொரு கதாபாத்திரத்திற்காக அழைத்து, சொன்னதற்கு மாறாக வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததாகச் சிலர் மாதங்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
தமிழில் இன்னும் நாயகியாக எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நல்ல முறையில் நடித்து வரும் ஒரு நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் சாக்ஷி அகர்வால்.
இப்பொழுது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நாயகியாக ஒரு சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால், சில பிரத்தியேக சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
