Ratan Tata:இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா.. இஸ்ரேல்,பிரான்ஸ் அதிபர்கள் இரங்கல் !

Advertisements

ஜெருசலேம்: தொழிலதிபர் ரத்தன் டாடா இந்தியா- இஸ்ரேல் உறவுகளின் சாம்பியன் என பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, அக்டோபர் 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். மும்பையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பெருமைமிக்க மகனும், நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்பின் சாம்பியனுமான ரத்தன் டாடாவின் இழப்பிற்காக நானும், இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருப்பதாவது: ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை இந்தியா மற்றும் பிரான்சில் தொழில்களை மேம்படுத்த பங்களித்தது.

பிரான்ஸ் இந்தியாவிலிருந்து ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டது. அவரது மரபு அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு சாதனைகள் மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் அவர் என்றும் நினைவில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *