
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் அரக்கோணம் பாராளுமன்ற பொறுப்பாளர் ரவிசந்திரன் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன் மற்றும் கண்ணன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ராகேஷ், நகர தலைவர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது கலர் புகை குண்டுகளை வீசி நாடாளுமன்றத்தின் மாண்புகளையும் பாதுகாப்பு விதி நெறிமுறைகளையும் இழிவு படுத்தும் விதமாக நடைபெற்ற சம்பவம் குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகத்திற்கு எதிராக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அமலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு எதிராக சுமார் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

