
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார்.
கான்பெரா விமான நிலையத்தில் அவரை அந்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் துணையமைச்சர் பீட்டல் கலீல் வரவேற்றார். கான்பெராவில் உள்ள போர் நினைவிடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையில் பணியாற்றி உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் பெயர்களைப் பார்த்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்க் தலைமையிலான உயர்நிலைக் குழுவினருடன், ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழுவினர் பேச்சு நடத்தினர்.
ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்ருமான ரிச்சர்டு மார்ல்சுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.
