Raja Kannappan: புதிய உயர் கல்வித்துறை அமைச்சர்!

Advertisements

இதுவரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அறிவித்த நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறையானது தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ்-க்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *