PWD, Puducherry: மீண்டும் பணி வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தல்!

Advertisements

மீண்டும் பணி வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தல்!

பொதுப்பணிதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். எம்.எல்.ஏ.க்களுடன் போராட்டக்குழு தலைவர் தெய்வீகன் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் தமிழிசையை சந்தித்தனர்.

புதுச்சேரி: புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் பொதுப்பணிதுறையில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தேர்தல் துறை நடவடிக்கையால் நீக்கப்பட்டனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு அமைத்து தங்களுக்கு மீண்டும் பணி கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர் தலைமையில் போராட்டக் குழுவினர் கவர்னர் தமிழிசையை சந்தித்தனர்.

அப்போது பொதுப்பணிதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். எம்.எல்.ஏ.க்களுடன் போராட்டக்குழு தலைவர் தெய்வீகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *