Puducherry Prostitution Case: ஸ்பா என்ற பெயரில் படுஜோராக நடந்த விபச்சாரம்!

Advertisements

புதுச்சேரி நகரப் பகுதியில் பியூட்டி கேர் மற்றும் ஸ்பா பெயரில் விபச்சாரம் நடத்திய ஐந்து பேரைப் பெரிய கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள shine beauty care and spa வில் விபச்சாரம் நடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது எடுத்துக் காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் உத்தரவின்படி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விபச்சாரம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டு அங்கிருந்த ஆறு பெண்களைப் போலீசார் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து பியூட்டி கேர் மற்றும் ஸ்பா உரிமையாளர் தமிழ்நாட்டைச் சார்ந்த சந்திரகுமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கடலூர் பகுதியைச் சார்ந்த கார்த்திகேயன் மற்றும் தேங்காய் திட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் முதலியார் பேட்டை சேர்ந்த பரத் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பியூட்டி கேர் மற்றும் ஸ்பா உரிமையாளர் ஏற்கனவே கோரிமேடு காவல் நிலையத்தில் இதே போன்று வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *