
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நெம்மேலி கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் 10 முதல் 20 நாட்களில் துவக்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கப்படும் எனநகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
1516.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய 150 எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பணிகள்குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் இன்னும் 10 முதல் 20 நாட்களில் தமிழக முதல்வர் துவக்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கப்படும்,
சென்னை சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், நன்மங்களம், கீழ்கட்டளை, மூவரம்பட்டு, பல்லாவரம் ஆகிய 12 பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.இதில் 9 லட்சம் பேர் பயனடைவார்கள்.இந்தத் திட்டத்தின் மூலம் 48 கிலோ மீட்டர் சுற்றளவு குடிநீர் பைப் லைன் புதைக்கப்பட்டுள்ளது.பணிகள் முடிந்த நிலையில் 50 எம்.எல்.டி குடிநீர் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடல்நீர் எடுக்கும் பணியில் இன்னும் 20 மீட்டர் தூரம் கடலில் பைப் லைன் புதைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக முதல்வரிடம் தேதி பெற்று புதிய நிலையம் திறந்து வைக்கப்படும் என்றார்.
தமிழக முதல்வர் இந்தப் பகுதிக்கு வந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தைப் பார்வையிட்டுப் பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும், தமிழக அரசு பணம் மற்றும் ஜெர்மன் வங்கியில் கடன் பெற்று நடைபெற்று பணிகள் நடைபெற்ற வருகிறது,
கடலிலிருந்து ராட்சதக் குழாய்கள்மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்தபின் வெளியேறும் கழிவு நீரால் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் மீன்வளம் குறையும் மேலும் கடல் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் குற்றச்சாட்டு வைப்பதாகக் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அரசு மீனவர்களுக்கு உதவிகரமாக இருக்கும், எந்தப் பாதிப்பும் வராது. அப்படியே ஏதேனும் பாதிப்பு வந்தால் அவர்களுக்கு என்ன நன்மை செய்யப்படுமோ அவர்களுக்கு இந்த அரசு நன்மை செய்யும் என அமைச்சர் கேமன்.நேரு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


