
எந்த நடிகர்போல மாப்பிள்ளை வேண்டும் எனப் பிரியங்கா மோகன் மனம் திறந்துள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து தமிழில் டாக்டர் திரைப்படம்மூலம் பிரபலமானார்.
அதன் பின்னர் மீண்டும் டான் படத்திலும் இருவரும் நடித்திருந்தனர். இதற்கிடையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரியங்கா மோகனிடம்,
நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா மற்றும் நானியின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகத் திரையிட்டு இதில் யாரை போலக் கணவர் வேண்டும் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், சிவகார்த்திகேயன் செம ஜாலியான பர்சன். சூர்யாவை பார்த்தவுடனே இவரைப் போல ஒருவர் கணவராக அமைய வேண்டும்.
தனுஷ் ரொம்பவே ஹார்ட் வொர்க் செய்யக் கூடியவர். நானி நல்ல நண்பர், நல்ல நண்பர் எனக்குக் கணவராக வந்தாலும் சந்தோஷம் எனத் தெரிவித்துள்ளார்.


