
அணுசக்தியால் இயங்கும் போஸிடான் எனும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டிரோன் சோதனை மிகப்பெரிய வெற்றிப் பெற்றதாக ரஷிய அதிபர் விளாதிமர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் ரஷ்யா அதிபர் விளாதிமர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அணுசக்தியால் இயங்கும் போஸிடான் டிரோனின் சோதனை மிகப்பெரிய வெற்றிப் பெற்றதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
இந்த டிரோன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், கிரேக்க புராணங்களின் கடல் கடவுளான போஸிடானின் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் எதிரி ரேடார்களை ஏமாற்றும் என்றார்.
போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை என்றும் அதை நிறுத்துவது சாத்தியமற்றது என்றும் புதின் மேலும் கூறினார். டிரோனில் பொருத்தப்பட்ட அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை விட சக்தி வாய்ந்தது என்றும் புதின் தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவின் பியூரெவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனையை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏவுகணைகளை சோதிப்பதற்கு பதிலாக உக்ரைனில் ரஷ்யா முதலில் போரை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த டிரோன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக புதின் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.


