
பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடைபெற்ற நடன விழாவில் இந்தியா, ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக ரஷ்யா நடன கலைஞர்களின் நடன அரங்கேற்றம் பார்வையாளர்களை வியப்படைய செய்தது.
பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவித்தும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா. மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம் இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமாக நடனமாடியும் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை மற்றும் பாடல்களுக்கு நடனமாடியும் அசத்தினர்.
இதை ஆயிரகணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். நாடு கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யா இந்தியா நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது தொடர்ந்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆண்டுதோறும் இந்திய கலைக்குழு ரஷ்யாவுக்கு செல்வதும்,ரஷ்யா கலைக்குழு இந்தியாவிற்கும் வருவது வழக்கம். இதன் மூலம் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிவர்த்தனை மேம்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

