
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
சீனாவின், தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வருகின்ற 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாடு சீன அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் உட்பட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பின்னர், இம்மாநாட்டில் உலக நாடுகளின் வர்த்தங்களைப் பற்றி ஆலோசிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

