
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரும் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். மும்பையில் உள்ள விடுதியில் தங்கிய அவர் இன்று மகாராஷ்டிர ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
அவரைப் பிரதமர் ரேந்திர மோடி வரவேற்றார். ஆளுநர் மாளிகையில் கடலோரத்தில் உள்ள புல்வெளியில் உலவியபடி இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.
மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழுவினரும், கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் உயர்நிலைக் குழுவினரும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
