Earthquake: வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Advertisements

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் டெல்லியிலும் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

இன்று பிற்பகல் 2.51 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதால் வீடுகள் மற்றும் பொருட்கள் குலுங்கின. இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக  2.25 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 4.2 என்ற ரிக்டர் அளவில்  ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகச் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டதால் இழப்புகள் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹபூர் மற்றும் அம்ரோஹா பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தலைமை செயலக அலுவலகம் நிலநடுக்கத்தால் குலுங்கியதால் அங்கு வேலை பார்த்தவர்கள் சாலைகளில் வந்து நின்றது. லக்னோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் நின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *