
இரண்டாக உடைந்த விமானம்! அதிஷ்டவசமாகத் தப்பிய பயணிகள்!
மும்பை: மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிய ரக விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை நோக்கி விஎஸ்ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானம் வந்தது. 8 பேருடன் வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரங்கள் சறுக்கி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானம் 2ஆக உடைந்தது. விமானத்தில் பயணித்த 8 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விமான நிலைய ஓடுதளத்தில் வழுக்கி விபத்து நடந்ததா? என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.



