மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி: பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை!

Advertisements

பல்லாவரம்: மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 17 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர். பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர், துரைக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்.

இவர் பாஜகவில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி என்பவரும் பாஜகவில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் அதே பகுதியில் யெங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்தார். அதில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டியில் உறுப்பினர் என்றும், இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் தான் ஒரு ரெப்ரி என்பது போன்றும் தனக்குத் தானே விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்திருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *