
பாலமேட்டில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியினைத் துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியினை துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், போட்டியில் ஆயிரம் காளைகளும், 500 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களம் காணுகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் கார், டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, விழாவில் நடிகர் சூரி கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதிக்குக் காளை சிலையைப் பரிசளித்தார்.




