Pablo Escobar: கடத்தல் மன்னனின் கதை!

Advertisements

கல்லறையில் திருடத் தொடங்கி பணக்காரர் பட்டியலில் இணைத்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்ரின் கதை!

பணத்தை எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம். நாம் சொகுசா வாழனும் அவ்வளவு தான். அதுக்கு ஒருத்தர் தேர்ந்தெடுத்தது கடத்தல் இன்றளவும் உலகில் பல பில்லியன் டாலர் புழங்கும் சட்டவிரோத தொழில்களில் முன்னணியில் இருப்பது போதைப்பொருள் வர்த்தகம்தான்.

உலகின் மிகப் பெரிய கடத்தல்காரன் உலகின் அதி பணக்காரர்களில் ஒருவராக எப்படி ஆக முடிந்தது. அன்றைய காலத்தில் ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் டாப் 10 பணக்காரர்களில் அவரும் ஒருவர். சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த அந்தக் கடத்தல் மன்னன் தான் பாப்லோ எஸ்கோபார் இவர் ஒரு கடத்தல் காரர். போதைப் பொருள் கடத்தல் பேர் வழி.

எஸ்கோபரின் செல்வமும் புகழும் பெருகியதால், அவர் தன்னை ஒரு தலைவராகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார் எஸ்கோபார் 1970 களின் முற்பகுதியில் கோகோயின் வர்த்தகத்தில் நுழைந்தார். மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து மெடலின் கார்டலை உருவாக்கினார். ஆதரவற்றவர்களுக்கான தொண்டு திட்டங்கள், கால்பந்து கிளப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர் மக்களிடையே பிரபலமடைந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு கூடியது. பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கொலைக்கு அவர்தான் காரணம் என்று தெரிந்த பிறகு அவருக்கு எதிராகப் பொதுக்கருத்து உருவாகியது.

Movie Pic

எஸ்கோபார் டிசம்பர் 1, 1949 அன்று கொலம்பிய நகரமான ரியோனெக்ரோ, ஆன்டியோகுயாவில் பிறந்தார். அவரது குடும்பம் பின்னர் என்விகாடோவின் புறநகர்ப் பகுதிக்குக் குடிபெயர்ந்தது.

எஸ்கோபார் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தாயார் பள்ளி ஆசிரியராக இருந்தபோது அவரது தந்தை விவசாயியாகப் பணிபுரிந்தார். சிறு வயதிலிருந்தே, எஸ்கோபார் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார். அதையே லட்சியமாகவும் கொண்டிருந்தார்.

எஸ்கோபார்  சிறு வயதிலிருந்தே, தவறுகள் செய்யத் தொடங்கினார். குற்றவாழ்க்கையை ஆரம்பத்திலேயே துவங்கினார். கல்லறைகளில் இருக்கும் விலை உயர்ந்த கற்களைத் திருடி விற்றார். போலியான சான்றிதழ்களைத் தயாரித்து விற்றார். பிறகு கார்களைத் திருடத் தொடங்கினார். இறுதியில் கடத்தல் தொழிலில் இறங்கினார்.

எஸ்கோபாரின் ஆரம்பகால முக்கியத்துவம் அமெரிக்க சிகரெட் பிராண்டான மார்ல்போரோ சிகரெட்டுகளை யார் கடத்தி விற்பது என்ற சண்டையில் உருவானது. அதில் அவர் கொலம்பியாவின் கடத்தல் சிகரெட் சந்தையில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தார். இந்தக் கடத்தல் சிகரெட்டிலிருந்து அப்படியே போதைக் கடத்தலுக்கு வழி வகுத்தது.1976 இல், எஸ்கோபார் 15 வயதான மரியா விக்டோரியா ஹெனாவோவை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர், ஒரு மகன், ஜுவான் பாப்லோ மற்றும் ஒரு மகள், மானுவேலா.

இன்று எஸ்கோபரின் மகன் செபாஸ்டியன் மரோக்வின்  சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஒழுக்க சீலராக விளங்கினார். அவருக்கு அவர் அப்பாவின் கடத்தல் தொழில் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக (motivational speaker) இருந்தார். மாரோக்வின் கட்டிடக் கலையில் உயர் படிப்பு முடித்தார். 2015-ம் ஆண்டு அவர், “பாப்லோ எஸ்கோபார்: மை ஃபாதர்” எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்த நூல் உலகின் மிக மோசமான போதைப்பொருள் அரசனுடன் வளர்ந்த கதையைச் சொல்கிறது. மேலும் அவர் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் தனது தந்தை மோசமான நபர் என்று கூறினார். “ஒரு சமூகமாக நாம் ஒருபோதும் செய்யக்கூடாத செயல்களைச் செய்தார். அது சுய அழிவுக்கான பாதை என்பது அவருக்குத் தெரியவிலை.  ஒழுக்கமான வாழ்க்கை வாழவில்லை. ஒரு போதைப்பொருள் மன்னனது மகன் இப்படி பேசுவது அதிசயமான ஒன்று.

எஸ்கோபாரின் பசுமையான மற்றும் விரிந்த தோட்டம். ஹசியெண்டா நெப்போல்ஸ் என்று அழைக்கப்படும், அதில் உலகெங்கிலும் உள்ள கவர்ச்சியான விலங்குகளால் நிரப்பப்பட்ட ஒரு மிருகக்காட்சி சாலை மற்றும் அதன் தோட்டங்களில் ஒன்றில் டைனோசர்களின் பெரிய சிற்பங்கள் ஆகியவை அடங்கும். கோகோயின் வர்த்தகத்தில் கொலம்பியா ஆதிக்கம் செலுத்தியது தற்செயலாக அல்ல. 1970 களின் முற்பகுதியில், இந்நாடு கஞ்சாவின் முதன்மையான கடத்தல் இடமாக மாறியது.


ஆனால் கொலம்பியா முதல்லிடத்தில் இருந்தது. அமெரிக்கா தான் தாயகம். எஸ்கோபார், மிகச் சாமர்த்தியமாகக் கோகோயின்  கடத்தலை செய்தார்.  1975 ஆம் ஆண்டில், கொலம்பியாவின் மெடெல்லின் நகரத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஃபேபியோ ரெஸ்ட்ரெப்போ கொலை செய்யப்பட்டார். எஸ்கோபர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று கூறப்பட்டது.பின்பு இவர் அதை உலக அளவில் விரிவுபடுத்தினார்.

1980களின் நடுப்பகுதியில், எஸ்கோபார் 30 பில்லியன் டாலர் மதிப்புடைய நிகர மதிப்பைக் கொண்டிருந்தார். மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பூமியில் உள்ள டாப் 10 பணக்காரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். சினிமாவில் வருவது போலப் பெரிய பணக்காரர் ஆனார். ஒரு லியர்ஜெட் விமானத்தை வாங்கினார்.

எஸ்கோபரின் செல்வமும் புகழும் பெருகியதால், அவர் தன்னை ஒரு தலைவராகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார். சில வழிகளில் அவர் தன்னை ஒரு ராபின் ஹூட் போன்ற நபராக நிலைநிறுத்திக் கொண்டார். பல உள்ளூர் மக்கள் எஸ்கோபாரை உண்மையில் அப்படிக் கொண்டாடினர். அவர் ஏழைகளுக்கான சமூக திட்டங்களை விரிவுபடுத்தும் வண்ணம் ஏராளமான பணத்தை செலவழித்தார்.

போலீசுக்கு தண்ணீர் காட்டி வந்த அவர் ஒரு நாள் பிடிபட்டார்.  போலீசில் பிடிபட்டாலும் அவர் தனது சிறையை மாளிகைபோல வடிவமைத்து ஆடம்பர வசதிகளுடன், தனது அடியாட்களுடன் வாழ்ந்தார். பணம் பத்தும் செய்யும்.ஆம் சிறையிலும் பணம் தான் விளையாடியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *