IRCTC: சேவை கட்டணம் இல்லை!

Advertisements

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.யின் www.air.irctc.co.in இணையம் வழியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் கிடையாது.

பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும். வருகின்ற நாட்களில் வெளிநாடு பயணம், புத்தாண்டு கொண்டாட்டம் போன்றவற்றிற்காகப் புக்கிங் செய்பவர்களுக்கு டிக்கெட் தவிர கூடுதலாக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்தச் சலுகை இன்று முதல் 27-ந்தேதி வரை வழங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *