New Delhi:இந்திய விமானப்படை தளபதி ஆகிறார் அமர் பிரீத் சிங்!

Advertisements

புதுடில்லி: இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் செப்.,30 அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.

தற்போது விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷன் விவேக் ராம் சவுத்ரி செப்.,30 அன்று ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து காலியாகும் அந்தப் பதவிக்குத் தான் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது இவர், விமானப்படையின் துணைத்தளபதியாக உள்ளார். கடந்தாண்டு பிப்.,1 முதல் இப்பதவியில் உள்ளார்.

1984 ல் விமானப்படையில் இணைந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர் வகித்து உள்ளார். மிக் 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

சிறப்பாகப் பணியாற்றியதற்காக 2019 ல் அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *