வீடுகளை இழந்து பரிதவீக்கும் மக்கள்!

Advertisements

Nepal | Flood | Bagmati River | Sindhuli | Kathmandu

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன...

இந்திய துணை கண்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம்வரை பருவமழைக்கான காலம். கேரளா தொடங்கி இமயம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் பெய்யும் மழையால் மலைப்பிரதேசங்களில் அவ்வபோது நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகத் தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன மழையால் பல்வேறு ஆறுகளில் செல்லும் நீர் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், பருவமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரக் காலமாகப் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Nepal | Flood | Bagmati River | Sindhuli | Kathmandu

இதனால், அங்குள்ள பாக்மதி மற்றும் சிந்துலி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளைச் சூழ்ந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் வசித்து வந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை, மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். வீடுகளை இழந்து தவித்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதுவரை நேபாளத்தில் பருவ மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 33 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியை மீட்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *