Advertisements

சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisements

