
இறந்தவரின் உடலைக் கால்வாயில் வீசிய அவலம்! வீடியோவால் சிக்கி கொண்ட காவலர்கள்.
விபத்தில் பலியான ஒருவரின் உடலைப் பீகார் போலீசார் கால்வாயில் வீசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஃபகுலி பகுதியில் உள்ள தோதி கால்வாய் பாலம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில், மூன்று போலீசார் இணைந்து ஒருவரது சடலத்தை இழுத்துச் செல்வதை காணலாம். உயிரிழந்த ஒருவரின் இரத்தம் தோய்ந்த உடலை இரண்டு போலீஸ்காரர்கள் இழுத்துச் செல்கின்றனர். பின்னர், மூன்றாவது போலீஸ்காரர் ஒருவர் உதவி செய்ய, மூன்று போலீஸ்காரர்களும் அந்தச் சடலத்தைக் கால்வாயில் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோ, இறந்த ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்தில் பலியான ஒருவரது உடலைக் கால்வாயில் வீசிய பீகார் போலீஸ்காரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
An extremely disturbing video of policemen in Muzaffarpur district of Bihar allegedly dumping body in canal in the middle of a busy road has surfaced. Police claimed the body was of a victim of an accident. pic.twitter.com/U17JhwX4CB
— Piyush Rai (@Benarasiyaa) October 8, 2023


