
சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தென் கிழக்கில் மோந்தா புயல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் சென்னைக்குக் கிழக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் நிலவும் இந்தப் புயலுக்குத் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோந்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து வரும் மோந்தா புயல் நாளை தீவிரப் புயலாக உருவெடுக்கும் என்றும், ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வுத்த துறை தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கக் கடலில் மோன்தா புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



