Minister K. R. Periyakaruppan: 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை!

Advertisements

பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதுஎன்று கூட்டுறவுத்துறை அமைச்சர்கே ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த, பிரதம பண்டக சாலைகள் மூலம் ரூ. 1019 கோடி அளவிற்கு பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கோபால், பதிவாளர் டாக்டர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் சிவன்அருள் உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *