
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணமாக வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்குலம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடைபெற்ற கங்கை ஆரத்தி விழாவில் கலந்துகொண்டார்.
மொரீசியஸ் நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் ராம்குலம் பிரதமராக இருக்கிறார். அவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களும், இருநாட்டு உயர்நிலைக் குழுவினரும் வணிகம், பாதுகாப்பு, பண்பாட்டுத் தொடர்பு ஆகியவற்றில் இருநாடுகளிடையே நிலவும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினர்.
அப்போது அறிவியல் தொழில்நுட்பத்துறை, பணியாளர் பயிற்சி, மின்னாற்றல், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகின.
தில்லியில் இருந்து வாரணாசிக்குச் சென்ற மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம் குலத்தை உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் வரவேற்றார்.
வாரணாசி தசாஸ்வமேதக் கட்டத்தில் நடைபெற்ற கங்கை ஆரத்தி விழாவில் மொரீசியஸ் பிரதமர் பங்கேற்றார். அதன்பின் படகில் ஏறிக் கங்கையாற்றில் மகிழ்ச்சியாக உலாவந்தார்.



