Mathi Meen Kulambu: சுவையான மத்தி மீன் குழம்பு!

பொதுவாக மீன் குழம்பு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் மத்தி மீன் குழம்பு என்றால் எப்படி இருக்கும்.

மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் ருசி எப்போதும் தனித்துவமாக இருக்கும். வாங்க இப்பொது தேங்காய்பால் ஊற்றிப் புதுமையான மத்தி மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்:

கடுகு -1 ஸ்பூன்
வெங்காயம் -3

வெந்தயம் 1/2 ஸ்பூன்
பூண்டு -10 பல்
கறிவேப்பிலை

கல் உப்பு
தக்காளி -3 அரைத்தது
மஞ்சள்தூள் -1 /4

மிளகாய்த்தூள் -2 ஸ்பூன்.
குழம்பு தூள் – 4 ஸ்பூன்.
புளி கரைசல் -50 கிராம்

தேங்காய்பால் – 1/2 மூடி
சுத்தம் செய்த மத்தி மீன் – 1/2 கிலோ.

மத்தி மீன் குழம்பு செய்யும் முறை:

ஒரு கடாயில் 1/4 எண்ணெய் உற்றி அதில் கடுகு 2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன். நறுக்கிய பூண்டு 10 பல் போட்டுப் பொரிந்தவுடன் அதில் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியபின் அதில் அரைத்த வைத்த தக்காளி போட்டு அதனுடன் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், குழம்பு தூள் 4 ஸ்பூன் போடவும்.பின் அதில் உள்ள பச்சை தன்மை போகும் வரை நன்றாக வதக்கவும்.

பின்பு அதனுடன் புளி கரைசல் 50 கிராம் ஊற்றி அதில் தண்ணிர் திட்டமாக ஊற்றிக் கொள்ளவும்.பின்பு 10 நிமிடம் குழம்பை கொதிக்க விடவும். பிறகு அதில் எடுத்து வைத்த தேங்காய்பால் 1/2 மூடி ஊற்றவும்.

தேங்காய் பால் ஊற்றிக் கொதித்த பிறகு மத்தி மீன்னை அதில் போடவும். மீனைப் போடும்பொழுது அதில் தண்ணிர் இல்லாமல் போடவும்.

மீனைப் போட்டபிறகு வேக வைக்க 3 நிமிடம் போதும். பிறகு உங்களுக்குப் பிடித்த சுவையான தேங்காய்ப்பால் மத்தி மீன் குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *