திமுக, அதிமுக மீது லயோலா மணி கடும் விமர்சனம் !

 திமுகவும், அதிமுகவும் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்ததில் தமிழ்நாட்டில் ரவுடி, கும்பலையும், கட்டப்பஞ்சாயத்து காரர்களையும், இளைஞர்களிடையே போதை புழக்கத்தையும், உருவாக்கி விட்டனர் என்றும், அதனை சரி செய்யும் பணியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட்டு வருகிறார் என்றும், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, தெரிவித்துள்ளார்.
திருவள்ளுரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புத்தக கிடங்கை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கடந்த முறை பாடப் புத்தகக் கிடங்கை பார்வையிட்ட போது, சில குறைபாடுகள் இருந்ததை சரி செய்துள்ளதாகவும், இருப்பினும் சில குறைபாடுகள் உள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட காரணத்தால் பாட புத்தகம் வைக்கப்பட்டுள்ள இடத்தில், மழை நீர் புகுந்துவிடாதபடி, மேல் கூரைகள் சரியாக அமைத்து,  ஜன்னல் பகுதிகளை புதுப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, லயோலாமணி ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவும், அதிமுகவும் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்ததில், தமிழ்நாட்டில் ரவுடி, கும்பல்களையும், கட்டப்பஞ்சாயத்து காரர்களையும், இளைஞர்களிடையே போதைப் புழக்கத்தையும், உருவாக்கி விட்டுவிட்டனர் என்றும், அதனை சரி செய்யும் பணியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட்டு வருவதாகவும் லயோலாமணி தெரிவித்தார்.
மேலும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் எனவும், அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி வரவேண்டும் எனவும், மாணவர்களின் வளர்ச்சி குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப், விஜய், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *