
மகன் திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர் தற்கொலை!
போச்சம்பள்ளி: மகன் காதல் திருமணம் செய்ததால் பூச்சி மருந்து குடித்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பெருபோனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரணவன் (50). இவரது மனைவி கீதா(45). இவர்களது மகன் ரஞ்சித் குமார்(27). இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் தீபிகா (23). பட்டதாரி. தீபிகா, ரஞ்சித்குமார் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இதையறிந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் மகனின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ரஞ்சித்குமார், தீபிகா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன், கீதா ஆகியோர் மனமுடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.


