
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து கொடை க்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளது .
மேலும் கொடைக்கானலுக்கு வரும் சில சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்களது வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .
இதனை தடுக்கும் விதமாக வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு பஸ்களில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் மாட்டியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது . இதனை பறிமுதல் செய்து 2 அரசு பஸ்களுக்கு ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் பயன்படுத்தும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

