மே மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்!

Advertisements

சென்னை:

கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தைத் தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தைப் பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே வரும் இந்த ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது.

முதலில் இந்த வருடம் டிசம்பருக்குள் கட்டுமானத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் மேற்கொள்ளும் வேகத்தைப் பார்க்கும்போது கண்டிப்பாக அடுத்த வருடம் ஜனவரியில்தான் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்டேஷனில் மொத்தம் 2 பிளாட்பார்ம் இருக்கும். ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க, இன்னொன்று லோக்கல் ரயில்கள் நிற்க. இதன் மூலம் இந்த ரயில்வே நிலையம் மல்டி மாடல் ரயில் நிலையமாக மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே நிலையம் ஸ்கை வாக்:

சிஎம்டிஏ தரப்பு இதுகுறித்து வெளியிட்ட தகவலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு இங்கே ஸ்கைவாக் அமைப்பதற்கு கொள்கை ரீதியான தொழில்நுட்ப ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அடித்தளம் அமைக்கும் பணி ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்க உள்ளது.

தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை அமைக்கப்பட உள்ள பாலத்திற்கு இந்த ஸ்கைவாக் இடையூறாக இருக்க கூடாது என்பதால் இதற்கான தொழில்நுட்ப அனுமதி வாங்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *