Kenya Rains: கனமழைக்கு 38 பேர் பலி!

Advertisements

புதுடெல்லி: கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் கனமழையால் கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டன. கனமழையால் நாடு முழுவதும் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 110,000 க்கும் மேற்பட்ட மக்களை வீடற்றவர்களாக இருக்கின்றனர். 27,716 ஏக்கருக்கும் அதிகமான (சுமார் 112 சதுர கிலோமீட்டர்) பயிர்கள் அழிந்துள்ளது. சுமார் 5,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கென்யாவில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என்றும் சில பகுதிகளில் ஒரே நாளில் 200 மிமீ வரை மழை பெய்துள்ளது என்றும் கென்யா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீட்புப் பணிகளும் முழுவீச்சுடன் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *