karur incident : உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எழுப்பிய பரபரப்பு கேள்விகள்..!

Advertisements

கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இதனையடுத்து, சிபிஐ விசாரணை, ரூ. 50 லட்சம் இழப்பீடு, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை உள்ளிட்ட 7 வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை அனைத்தையும் இன்று நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதில்,  அரசு தரப்பு வழக்கறிஞர், பொதுவாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆதாரம் இன்றி வழக்கு தாக்கலால் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என வாதம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்?
விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே?
விஜய் பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா?
குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?

பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு சரமாரி கேள்வி எழுப்பினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *