Jammu and Kashmir Assembly Elections: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Advertisements

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

காஷ்மீர் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் சி.பி.எம். கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், சில தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, எங்கள் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியை ஆதரிக்க தயார் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்களை பா.ஜனதா மேலிடம் இன்று அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் நாளை வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. .

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *