
இந்தோ பசிபிக் மண்டலத்தில் சிறந்த கப்பல் பழுதுபார்க்கும் மையமாக இந்தியா விளங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது இன்று நமது நட்பு நாடுகளின் கப்பல்கள் பழுதுபார்ப்புப் பணிக்காக இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு வந்து செல்வதாகக் கூறினார்.
இது கப்பல்கட்டும் தொழிலில் இந்தியாவின் திறனையும் நம்பிக்கையையும், வளர்ச்சியையும் காட்டுவதாகக் குறிப்பிட்டார். இந்தோ பசிபிக் மண்டலத்தில் கப்பல் பழுதுபார்க்கும் மையமாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கப்பல்கட்டும் தொழில் அமைப்பு இன்று உலகத் தரமான தொழில்நுட்பத்துடனும் தொழில் நேர்த்தியுடனும் செயல்படுவதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.



