D. Imman: நினைவை பகிர்ந்த இமான்!

Advertisements

ஒரு நடிகரின திரை வாழ்வில் ஒரு படம் எந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அதன் விமர்சனங்கள் மற்றும் வசூலே தீர்மானம் செய்கின்றன.

அப்படி ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சில படங்கள் அவர்களின் திரை வாழ்வை புரட்டி போட்டவைகளாக இருக்கும். அப்படி நடிகர் தனுஷ் அவர்களின் கலை பயணத்தில் ஒரு முக்கிய கமர்ஷியல் படமாக இது நாள் வரை உள்ளது தான் “திருவிளையாடல் ஆரம்பம்”.

ஒரு எளிமையான ஒன் லைன் ஐ வைத்து அதில் காமெடி, சென்டிமென்ட், பாடல்கள், ஆக்ஷன் என அனைத்தையும் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர் பூபதி பாண்டியன். படத்தின் கதைப்படி, தனுஷ் வேலையற்ற வாலிபனாக வலம் வருகிறார்.

அதே நேரத்தில் பிரகாஷ்ராஜின் தங்கையான ஷ்ரேயாவை காதலிக்கிறார். இவர்களின் காதல் பிரகாஷ் ராஜ்ஜுக்கு தெரிய வரவே. அதன் பின்னர் தனுஷ் – பிரகாஷ்ராஜ் இடையே நிகழும் சுவாரசிய சம்பவங்களே படத்தின் மீதிக் கதை. ஒரு பக்கா கமர்ஷியல் நாயகனாக தனுஷ் அவர்களை நிலை நிறுத்திய படம் என்றால் அது “திருவிளையாடல் ஆரம்பம்” என்று சொல்லலாம்.

குறிப்பாக, டி. இமான் இசையில் உருவான பாடல்கள் தான் படத்தின் பக்க பலமாக நின்று உதவியது எனலாம். குறுகிய பட்ஜெட் தயாரிப்பில் உருவான இப்படம் பெரிய லாபத்தையும், தனுஷை கமர்ஷியல் வட்டத்தில் மிகவும் நல்ல இடத்தில் கொண்டு வைத்தது.

என்ன தான் தனுஷ் தற்போது உயர்ந்து வேறு ஒரு இடத்துக்கு சென்று இருந்தாலும, தொடர்ந்து அவர் கமர்ஷியல் படங்களை கொடுக்க தவறுவதில்லை, அதே போல அவர் எந்த கால கட்டத்தில கமர்ஷியல் படங்களை கொடுத்தாலும் அவர் ஹிட் அடித்து விடுகிறது.

17 வருடங்களை நிறைவு செய்து உள்ள இப்படத்தின் நினைவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பகிர்ந்து உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *