
கள்ள தொடர்பால் நடந்தேரிய கொலை!
கள்ள தொடர்பை கைவிட மறுத்ததால் விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிபட்டி கிராமம் வைரப்பள்ளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. (வயது 50), விவசாயி. இவரது மனைவி சித்ரா. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சித்ரா இறந்து விட்டார்.
இவர்களது மகள் ஷாலினி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து சேலத்தில் வசித்து வருகிறார். தற்போது ரவியும், அவரது தாய் பொன்னம்மாவும் வைரப்பள்ளி காடு பகுதியில் வசித்து வருகின்றனர். ரவி தோட்டத்தின் அருகில் கூலி தொழிலாளி அல்லிமுத்து (50) மற்றும் இவரது மனைவி வசந்தா (45) தம்பதி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயி ரவிக்கும், அல்லிமுத்து மனைவி வசந்தாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு ரவி அல்லிமுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வசந்தா இல்லை. அல்லிமுத்து மட்டும் இருந்துள்ளார். அப்போது அல்லிமுத்து தனது மனைவியுடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அல்லிமுத்து வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ரவியை சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தப்பி ஓடிய கூலி தொழிலாளி அல்லி முத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதற்கட்டமாக விசாரணையில் அல்லிமுத்துவின் வீட்டில் தோட்டா செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்து உள்ளது. இந்த தோட்டாவை பயன்படுத்தி ரவியை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இந்த மூலப் பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


