இளைஞருடன் ஜாலியாக இருந்த நடிகை ஹுமைரா நுஸ்ரத் ஹிமு கொலை!
டாக்கா: இளைஞருடன் ஜாலியாக இருந்த வங்கதேச நடிகை ஹுமைரா நுஸ்ரத் ஹிமு திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா நுஸ்ரத் ஹிமு (37), உத்தரா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரது வீட்டில் ஹுமைரா கிடந்தார். தகவலறிந்த ஹுமைராவின் தோழி ஒருவர், அவரை மீட்டு உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஹுமைரா நுஸ்ரத் ஹிமு உயிரிழந்தார்இதுகுறித்து உத்தரா பிரிவு துணை கமிஷனர் மோர்ஷெட் ஆலம் கூறுகையில், ‘ஹுமைராவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் காதல் இருந்துள்ளது. இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஹுமைரா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர்தான் முடிவு தெரியவரும்.
நடிகையுடன் தொடர்பில் இருந்த இளைஞரை தேடி வருகிறோம்’ என்றார். ஹுமைரா இறந்த செய்தி, வங்கதேச திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘அமர் போந்து ரஷெட்’ போன்ற திரைப்படம் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஹுமைரா நுஸ்ரத் ஹிமு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.