
ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர்மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்தச் சொத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு முண்டாச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர்மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ. 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ராஞ்சி சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர்மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்தச் சொத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


