Advertisements

இந்தியாவில் 1700களிலேயே இங்கு தங்கம் இருப்பது அறியப்பட்டது. 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் மைசூர் பேரரசை மகாராஜாவிடம் ஒப்படைத்தாலும், கோலார் தங்க வயல்களின் உரிமையை மட்டும் தாங்களே வைத்துக் கொண்டார்கள்.1880களில், முழுவீச்சில் தங்கம் வெட்டும் பணி தொடங்கியது. பிரிட்டிஷ் அரசு சுமார் 900 டன் தங்கத்தை இங்கிருந்து சுரண்டி எடுத்து விட்டது.
ஆனால், இதற்காக அவர்கள் இந்திய தொழிலாளர்களை பயன்படுத்தினார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகளும் இல்லாமல், உயிரை பணயம் வைத்து வேலை செய்ததன் விளைவாக, 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் கூட, கே.ஜி.எஃப் தொழிலாளிகள் உண்மையான சுதந்திரத்தைப் பெற 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. 1956ஆம் ஆண்டில் தான் பிரிட்டிஷ் அதிகாரிகள் முழுமையாக விலகினர். பின்னர் மாநில அரசு கண்காணிப்பில், 1972ல் பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.ஆனால் சிக்கல் என்னவென்றால், தங்கம் அடி வட்டத்தில் கிடைக்கத் தொடங்கியது.
1900களில் 1 கிமீ ஆழத்தில் இருந்த தங்கம், 1980களில் 3 கிமீ ஆழத்தில் தான் கிடைத்தது. அதேசமயம், ஒரு டன் தாதுவில் 45 கிராம் தங்கம் இருந்த நிலைமையிலிருந்து, இறுதியில் 3 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும் அளவிற்கு தங்கம் குறைந்தது.
Advertisements



