
டிசம்பர் மாத தொடக்கம் முதலே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை (07.12.2024) ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.7,115 க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (09.12.2024) 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7130-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து, ரூ.57,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்ம், ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து, ரூ.5,885க்கும், ஒரு சவரன் ரூ. 47,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
