Funny Crime: குறட்டை விட்டுத் தூங்கிய திடருடன்!

Advertisements

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டுத் தூங்கிய திடருடனை போலீஸார் கைது செய்தனர்.

தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டாங். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாமெனத் திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்துப் புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டிலிருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ எனக் கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையிலிருந்து வருவதை உணர்ந்து அங்குச் சென்றபோது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *