கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி!

Advertisements

கோலார்:

கர்நாடகாவில் பள்ளி சுற்றுலா சென்றபோது கடலில் குளித்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள், முருடேஸ்வரர் கோவில் கடற்கரைக்குப் பொழுதைக் கழிக்க சென்றனர்.

அவர்களில் 7 மாணவிகள் ஒன்றாகக் கடற்கரையில் குளிக்க இறங்கி இருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கடல் அலையில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அபயக்குரல் எழுப்பிய மாணவிகளைக் கண்ட ஆசிரியர்கள், கடலில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.

நீண்ட நேர போராட்டத்தில் 7 மாணவிகளில் 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. ஸ்ரீவந்ததி, தீஷிதா, வந்தனா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழத்தனர். காப்பாற்றப்பட்ட யசோதா, வீக்ஷனா, லிபிகா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவனைக்கு சென்று நிலைமையைக் கேட்டறிந்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *