Edappadi Palaniswami: காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – இ.பி.எஸ் கண்டனம்!

Advertisements

திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடிபழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் தி.மு.க. முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.

உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம்குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு தி.மு.க. முதல் அமைச்சரை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *