
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 352 மி.மீ.-க்கு மேல் மழை பதிவாகியது என்று மாவட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் 118 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 206மி.மீ மழை பதிவாகியது. தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணத்தொகை வழங்கப் போவதாக அரசு அறிவித்ததையடுத்து
தற்போது இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையான ரூ. 6000 -க்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

