
தி.மு.க. அரசைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர், ” விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேலும் கூறியதாவது:-திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.
மாநாட்டிற்கான அனைத்து செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்கச் சொல்லித் திமுக போட்ட மைதானம், திமுக போட்ட மேடை, திமுக போட்ட சேர்கள் எனத் திமுக செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும்.
ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.திமுக அரசுக்கு எதிராக எந்தத் தீர்மானமும் போட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள் என்று முதல்வர் முதலமைச்சர் கட்டாயப்படுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

